வணக்கம் ,என் பெயர் திருமகள்அரசி நாகராஜன் (அரசி). நான் பிறந்து வளர்ந்தது சங்கம் வளர்த்த மதுரையில் . மதுரை பாத்திமா கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், மதுரை தியாகராஜர் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் (கணினி அறிவியல்) பெற்றேன். என்னுடைய 18ஆவது வயதில் இருந்தே சிறு குழந்தைகளுக்குப் பள்ளிப் பாடங்களை ஓய்வு நேரத்தில் சொல்லிக் கொடுத்து வந்தேன். ஆசிரியராக வேண்டும் என்பது என்னுடைய கனவு. ஆனால் கல்லூரி படிப்பு முடித்தவுடன் மென்பொருள் பணியாளராக சென்னையில் 4 வருடங்கள் பணியாற்றினேன்.பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும்போது மதுரையில் உள்ள பல பள்ளிகளில் என் தாத்தா அ.கி.செல்வகணபதி அவர்களுடன் சேர்ந்து திருக்குறள் பேரவைக்காக திருக்குறள் வகுப்புகள் மற்றும் திருக்குறள் போட்டி தேர்வுகள் நடத்தி வந்தேன். மேலும், மதுரை தமிழ்ச் சங்கத்தின் மொழிபெயர்ப்புத் துறையிலும் சில தன்னார்வ பணிகளை செய்துள்ளேன். திருமணத்திற்கு பிறகு அட்லாண்டா குடியேறினேன்.கனடாவிலும் சில ஆண்டுகள் வசித்து வந்தேன். கற்பித்தலில் எனக்கு எப்போதும் பேரார்வம் உண்டு. என்னுடைய ஆசிரியர் கனவு நனவாகியது மேரியேட்டா தமிழ்ப் பள்ளியில் தான்.இங்கு நமது மொழியைக் கற்பிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் 2019 முதல் மேரியேட்டா தமிழ்ப் பள்ளியில் கற்பித்து வருகிறேன்.மழலை வகுப்பில் ஆரம்பித்து இப்போது நான்காம் வகுப்பு ஆசிரியராக தொடர்கிறேன்.அதோடு ஒரு தனியார் பள்ளியில் அறிவியல் மற்றும் கணித ஆசிரியராக வேலை செய்கிறேன்.என்றும் என் தமிழ்ப்பணியைத் தொடர விரும்புகிறேன். நன்றி
Thirumagalarasi Nagarajan
GRADE 4B
